×

லாட்டரி நிறுவனத்திடம் இருந்து திமுக ரூ.900 கோடி வாங்கியது ஏன்? - ஆதவ் அர்ஜுனா

 

ரூ.900 கோடியை லாட்டரி நிறுவனத்திடம் இருந்து திமுக வாங்கியது ஏன்? நான் லாட்டரி உட்பட எந்த தொழிலிலும் ஈடுபடவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “எதிர்க்கட்சியினர் லாட்டரி... லாட்டரி என கத்துகின்றனர். தைரியம் இருந்தால் லாட்டரி நிறுவனத்திடம் இருந்து எதற்காக தொள்ளாயிரம் கோடி ரூபாய் வாங்கினீர்கள் என்று சொல்லுங்கள். நான் லாட்டரி உட்பட எந்த தொழிலிலும் ஈடுபடவில்லை.திமுக பொருளாளர் சாராய ஆலை நடத்துகிறாரா இல்லையா? ஜெகத்ரட்சகன் சாராய ஆலை வைத்துள்ளாரா இல்லையா? முதலமைச்சர் விஜய் ஒரு வார்த்தையைத் திரும்பத் திரும்ப அமைச்சர்கள் கூட்டத்தில் சொல்லிக்கொண்டே இருக்கிறார். லஞ்சம் என்பது மிகப்பெரிய குற்றம் என்று ஒவ்வொரு அமைச்சரிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அப்படி யாராவது லஞ்சத்தில் ஈடுபட்டால் இங்கே இருக்கக்கூடிய ஒருவர்கூட அமைச்சராக இருக்க முடியாது என்பதையும் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இதுவரை எந்தத் துறையிலும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை. சரியாக செயல்படாத அம்மா உணவகத்திற்கு உரிய நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படுகிறது” என்றார்.