"எங்க முதலமைச்சர் விஜயிக்கு பணம் ஒரு விஷயமே கிடையாது.. தேர்தலில் ஒரு பைசா கூட நாங்க செலவு பண்ணல"- ஆதவ் அர்ஜுனா
இளைஞர்களுக்கான பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “எங்க முதலமைச்சர் விஜயிக்கு பணம் ஒரு விஷயமே கிடையாது.. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கிய எங்கள் முதல்வர் அதை தூக்கிப் போட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார் என்றால் அவருக்கு பணம் ஒரு முக்கிய விஷயம் இல்லை என்று தான் அர்த்தம். அமைச்சர்களாகிய நாங்கள் தேர்தலுக்கு ஒரு ரூபாய் செலவு செய்யவில்லை. தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சாதி, மதம், பணம் என எதுவுமின்றி மக்கள் வாக்களித்துள்ளார்கள்
தமிழ்நாட்டு மக்கள் முதல்முறையாக பணம், சாதியை தூக்கி போட்டு இருக்காங்க.. அவங்களுக்கு தேவை வளர்ச்சி. இனி எதிர்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் எங்கள் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். Opposite-ல யாரும் இல்லை.. அதனால்தான் கொளத்தூரில் வரலாற்றை முடிச்சிட்டோம்.
தமிழ்நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் தான் என முதலமைச்சர் நம்பியுள்ளார், அதன் அடிப்படையில் இளைஞர்களுக்கான பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும். கடந்த ஐந்து ஆண்டு பட்ஜெட் எடுத்தால் கூறிய பட்ஜெட்டையே மீண்டும் காபி செய்து கூறுவார்கள். இந்த பட்ஜெட் ஒரு புதிய பட்ஜெட்டாக இருக்கும். பெரிய பெரிய அறிவிப்புகள் இருக்கும். கடந்த கால ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் வாங்கிய ஊழலை நாங்கள் ஒழித்துள்ளோம். ஊழல் இல்லா தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அனைத்து முதலீட்டாளர்களும் வரவேண்டும், நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்.