×

“விஜயை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக தயாராக இருந்தது"- ஆதவ் அர்ஜூனா

 

 

தவெக தலைவர் விஜயை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக தயாராக இருந்தது என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜூனா, “தவெக தலைவர் விஜயை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக தயாராக இருந்தது. மதச்சார்பற்ற கொள்கையில் இருந்து வெளியே வந்தால் என்டிஏ கூட்டணியில் அவர் முதல்வர் வேட்பாளர். விஜய் மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால்தான் ஜனநாயகன் முடக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் பேசிக்கொண்டிருந்தால், ஜனநாயகன் படம் அப்போதே ரிலீஸாகி விஜய் 1500 கோடி சம்பாதித்திருப்பார்.


தவெக, பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்ற கட்டமைப்பை திமுக, அதிமுக, பாஜக என மூன்று பேரும் சேர்ந்து உருவாக்கினார்கள். நம் அண்ணன் விஜய் அதற்கெல்லாம் பதில் சொல்ல மாட்டார். ஏனென்றால், யார் மிரட்டுகிறாங்களோ அவங்கதான் பயப்படுறாங்கன்னு அர்த்தம். யார் அமைதியாக இருக்கிறாரோ அவங்க தைரியமாக இருக்கிறாங்கன்னு அர்த்தம். அண்ணன் திருமாவளவனிடமிருந்து கண்ணீர் மட்டும்தான் வரவில்லை. எவ்வளவு வலியோடு பேசியிருப்பார்? திமுக, அதிமுக கடும் நெருக்கடியை எதிர்த்து விஜய்
போராடுகிறார்” என்றார்.