#BREAKING ரஜினியிடம் மன்னிப்பு கேட்டார் ஆதவ்
ரஜினி குறித்து நான் சொன்ன நோக்கம் வேறு, ஒருவேளை என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொல்லப்பட்டால், என்னுடைய வருத்தத்தையும் மன்னிப்பையும் பகிரங்கமாக கேட்டுக்கொள்கிறேன் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, "ரஜினிகாந்தை சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமோ அல்லது பயந்துவிட்டார் என்பதையோ நான் சொல்லவில்லை. திமுகவின் சூழ்ச்சி என்றுதான் கூறினேன். ரஜினி அவர்களின் அறிக்கையை பார்த்து தவறாக புரிந்து கொண்டார் என தெரிந்து கொண்டேன். ரஜினிகாந்த் அவர்கள் எங்கள் தலைவருக்கும் நீங்கள் தலைவர் என்பதை அசோக் கூறினார். எங்கள் தலைவர் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடும். நான் சொன்ன நோக்கம் வேறு, ஒருவேளை என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொல்லப்பட்டால், என்னுடைய வருத்தத்தையும் மன்னிப்பையும் பகிரங்கமாக கேட்டுக்கொள்கிறேன்" என்றார்