×

“உங்க அப்பாவை கைது செய்யும்போது நீங்கள் ஓடினீர்களே..”- ஸ்டாலினை ஒருமையில் பேசிய ஆதவ் அர்ஜூனா

 

தமிழகத்தின் ஒரே நம்பிக்கை என்பதால் தவெகவை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

தவெக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஆதவ் அர்ஜூனா,  “தமிழகத்தின் ஒரே நம்பிக்கை என்பதால் தவெகவை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். கூட்டத்திற்கு நிர்வாகிகள் பத்தாயிரம் பேர் வருகிறார்கள் என்று சொல்ல முடியுமே தவிர மக்கள் எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று எங்களால் எப்படி கணிக்க முடியும்? இதெல்லாம் உளவுத்துறைக்கு தெரியாதா? இது தெரியவில்லை என்றால் உள்துறை அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள். எங்கள் தலைவர் சொன்னால் செயலில் இறங்க,ஒன்றரை கோடி பேர் இருக்கிறோம். எங்கள் தலைவர் அதிகமாக பேசமாட்டார். எங்கள் தலைவர் என்றால் செயல்,செயலின் மூலமாகவே  அவர் வெற்றிகளைக் குவிப்பார்.

கரூர் சம்பவத்தில் பொதுச்செயலாளர் ஓடிவிட்டார். நிர்மல் குமார் ஓடிவிட்டார்... என்கிறீர்களே! உங்கள் அப்பாவை கைது செய்யும்போது நீங்கள் ஓடினீர்களே... அப்படியா நாங்கள் ஓடினோம்? திமுகவுக்கு வரலாறு தெரியுமா? கலைஞர் கைது செய்யப்படும்போது சொந்த மகன் ஓடினார். வரலாறு பற்றி பேச ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள்” எனக் காட்டமாக பேசினார்.