AI தொழில்நுட்பத்தில் ஊழல் செய்து தி.மு.க. சாதனை -ஆதவ் அர்ஜூனா
உலகிலேயே ஏஐ தொழில் நுட்பத்தில் ஊழல் செய்து திமுக சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூன, "பெரியாரின் பெயரில் அமைந்த நூலகத்திற்கு வாங்கிய புத்தகங்களில் ஏஐ முறையில் ஊழல் நடந்துள்ளது.
பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு வெளியானது முதல் மு. க. ஸ்டாலின் அறிக்கை வெளியிடாதது ஏன்? தவெக அரசை விமர்சித்து தினமும் 3 அறிக்கை வெளியிடும் மு. க. ஸ்டாலின் தற்போது மெளனம் காப்பது ஏன் ? மு. க. ஸ்டாலின் தமிழ் அறிவுலகத்தை அவமானத்தில் கூனிக் குறுக வைத்துள்ளார். டிஜிட்டல் ஊழல், ஏஐ ஊழல் என காலத்திற்கு தகுந்தவாறு ஊழல் செய்வதில் திமுக வளரும். உலகிலேயே ஏஐ தொழில் நுட்பத்தில் ஊழல் செய்து திமுக சாதனை படைத்துள்ளது. மக்களிடம் மாட்டிக் கொண்டதும் திமுக போடுகிற ஜேப்படி திருடன் வேலை இனி எடுபடாது" எனக் கூறினார்.