“இவரு இளம் பெரியாராம்? பெரியார்னு Spelling படிக்க தெரியுமா?”- ஆதவ் அர்ஜூனா
அண்ணன் செங்கோட்டையின் வந்தபிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிவிட்டது என தவெக பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆதவ் அர்ஜூனா, “இளைஞர்களே இல்லாமல் இளைஞரணி சந்திப்பை நடத்தியது திமுக. அப்பா, மகன் என ரெண்டு இளைஞர்கள் சேர்ந்து இளைஞர் மாநாடு நடத்தினாங்க. அதுல மகன் இளம் பெரியாராம். சமூகநீதின்னா என்னன்னே தெரியாதவர் இளம் பெரியாராம். வருடன் உழைப்பை சிதைக்கிற மாதிரி உங்கள் மகனை ‘இளம் பெரியார்’ என்று சொல்கிறீர்களே! பெரியார்னு Spelling படிக்க தெரியுமா? பெரியாரின் 70 வருட உழைப்பை சிதைக்கிற மாதிரி உங்கள் மகனை `இளம் பெரியார்' என்று சொல்கிறீர்களே! பெரியார் போல ஒருவர் உருவாகவும் இல்லை, இனி அப்படி உருவாகப் போவதுமில்லை. பெரியாரை அவமானப்படுத்தும்போது திராவிட கழகம் என்ன செய்து கொண்டு இருந்தது? பெரிய தலைவர்கள அசிங்கப்படுத்துனா தவெக பெரும் போராட்டம் செய்யும். அண்ணன் செங்கோட்டையன் வந்த பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிவிட்டது” என பேசினார்.