திமுகவிற்கு 20% மேல் வாக்குகள் கிடையாது- ஆதவ் அர்ஜுனா
திமுகவிற்கு 20% மேல் வாக்குகள் கிடையாது, கூட்டணி கட்சிகளை வைத்து தான் இத்தனை ஆண்டுகள் வென்றார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.
திமுகவிற்கு 20% மேல் வாக்குகள் கிடையாது, கூட்டணி கட்சிகளை வைத்து தான் இத்தனை ஆண்டுகள் வென்றார்கள். கூட்டணி கட்சி இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தால் 10 தொகுதி கூட வெல்ல முடியாது. புதுச்சேரியில் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தியது ஏன்? நல்லவர்களை ஒருபக்கம் மக்கள் நிறுத்துவதுதான் ஜனநாயகம். கூட்டணி கட்சி தலைவர்கள் கால் மீது கால் போட்டு அமருவதற்கு சோபா அனுப்பி வைத்தோம். நீங்கள் செய்தது ராஜதந்திர அரசியல், நாங்கள் செய்வது சோபா அரசியலா? கூட்டணி கட்சிகள் இல்லாமல் உதயநிதியால் எதிர்க்கட்சி தலைவராக கூட வந்திருக்க முடியாது. இதுதான் பாஜகவுக்கு மெசேஜ் தமிழ்நாட்டில் மதவாதம் நுழையவே முடியாது, இதுதான் பாஜகவிற்கான மெசேஜ் எவனாலும் பணம் கொடுத்து வைகோ, திருமாவளவனை வாங்க முடியாது
வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னர், நாங்கள் எங்கள் தலைவரின் பெயரை ‘விஜய்' என்றுதான் குறிப்பிட்டோம். ஆனால், எங்கள் தலைவரோ ‘சி.ஜோசப் விஜய்' என்று குறிப்பிட்டுக் கொண்டார். இதுதான் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. ஏனென்றால், எங்களுடைய தலைவர் மக்களையும், பெண்களையும் நம்பினார். தான் சிறுபான்மைச் சமூகத்திலிருந்து வந்திருந்தாலும், தன்னுடைய பெயரைச் சொல்லி, ‘இந்த நாடு மதச்சார்பற்ற நாடு, இதில் என்றும் மதவாதம் நுழைய முடியாது' என்று சொன்னவர் எங்கள் தலைவர். இதுதான் பாஜகவிற்கான செய்தி. இதற்கு மேல் என்ன செய்தி கொடுக்க முடியும்? திமுக சிறந்த ஆளுங்கட்சியாக இருந்ததில்லை. தற்போது சிறந்த எதிர்க்கட்சியாகவும் இல்லை. மு.க.ஸ்டாலின், உதயநிதியை வைத்து திமுகவினர் பிம்பத்தை உருவாக்கினார்கள். அதிகாரத்தை பற்றி மட்டுமே திமுக யோசிக்கும்” திமுக எப்போதும் அதிகாரத்தை பற்றி மட்டுமே யோசிக்கும். திமுக இரண்டாவது முறை வென்றதாக வரலாறே இல்லை. சிறந்த ஆளுங்கட்சியாக திமுக இருந்ததில்லை ஆட்சி அதிகாரத்தை பெற்று, குடும்ப ஆட்சி மட்டுமே இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை ஸ்டாலின் உருவாக்கினார். கூட்டணி இல்லாமல் திமுகவால் 10 தொகுதிகளில் வென்று காட்ட முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.