×

“எடப்பாடியிடம் விலை போய்விட்டார்... கருப்பு ஆடுகள் கட்சியில் அதிகரித்துவிட்டது”- ஆதவ் அர்ஜூனா

 

எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் துரோகம் செய்துவிட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் 233 தொகுதிகளில் தவெக போட்டியிடுகிறது. தவெக சார்பாக எடப்பாடி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நித்யாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. இவர்கள் இருவருமே வேட்புமனுவை முழுமையாக நிரப்பவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக ஆதவ் அர்ஜூனா கூறுகையில், “எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் துரோகம் செய்துவிட்டார். எடப்பாடி தொகுதியில் பழனிசாமிக்கு கடும் போட்டியை கொடுப்போம். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் பணம் பெற்றுக் கொண்டு விலை போய்விட்டார். கருப்பு ஆடுகள் கட்சியில் அதிகரித்துவிட்டது.