☰
×

குழந்தைகளுக்கான ஆதார் புதுப்பிப்பு இலவசம்

 

குழந்தைகளின் ஆதார் அட்டைக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை 2027 செப்டம்பர் 30ஆம் தேதி வரை இலவசமாக மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பிறந்த குழந்தை முதல் அனைத்து வயதினருக்கும் வழங்கப்படுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் பதிவு இல்லாமல் புகைப்படம் மட்டுமே எடுக்கப்பட்டு, பெற்றோரின் ஆதார் விவரங்களுடன் இணைக்கப்படும்.   கைரேகை மற்றும் கருவிழிப் படலம் பதிவு செய்யப்படாது. பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் அட்டை மூலம் விண்ணப்பிக்கலாம். வழங்கப்படும் 12 இலக்க எண் வாழ்நாள் முழுவதும் மாறாது. குழந்தைகளுக்கு 5 வயது மற்றும் 15 வயது நிறைவடையும்போது கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படத்தை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். 

இந்நிலையில் குழந்தைகளுக்கு 5 வயது நிறைவடையும்போது, மீண்டும் 15 வயது நிறைவடையும்போதும் பயோமெட்ரிக் எடுக்க ஆணையிடப்பட்டுள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளின் ஆதார் விவரங்களை உரிய காலத்தில் புதுப்பித்து பயன் பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.