×

பெரும் அதிர்ச்சி! ஓடும் பேருந்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

 

ஒட்டன்சத்திரம் அருகே ஓடும் பேருந்தில் பயணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருச்சிக்கு 22 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுனர் ராமச்சந்திரன் ஒட்டி சென்றார். நடத்துனராக செந்தமிழ் செல்வன் பணியில் இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் பஸ் ஏறி பின் இருக்கையில்  அமர்ந்து வந்துள்ளார். பேருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டு இருந்த போது ரெட்டியார்சத்திரம் அருகே நள்ளிரவு ஒரு மணி அளவில் பேருந்தில் அமைந்திருந்த 30 வயது மதிக்கத்தக்க  நபர் அவர் கொண்டு வந்த வேஷ்டியில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பயணி ஒருவர் பேருந்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பயணி எந்த ஊர்,யார் அவர்  என்ற விவரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.