×

அக்காவின் 31 சவரன் தங்க நகைகளை ஆண் நண்பருக்கு கொடுத்த தங்கை - விசாரணையில் அம்பலம்!!
 

 

அக்காவின் 31 சவரன் தங்க நகைகளை எடுத்து வேலையில்லாமல் இருந்த தனது நண்பருக்கு தங்கை தானமாக கொடுத்த  சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கணவர் வீட்டில் பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், ராயபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் நகைகளை வைத்துள்ளார் சங்கீதா. வீட்டில் நகைகள் இல்லாதது குறித்த போலீசார் நடத்திய விசாரணையில், கணவனை பிரிந்து அதே வீட்டில் வசிக்கும் ரேவதி தனது ஆண் நண்பர் கிஷோருக்கு  நகைகளை கொடுத்தது அம்பலமாகியுள்ளது.

கிஷோரை கைது செய்த ராயபுரம் போலீசார் அவரிடம் இருந்த தங்க நகைகளை மீட்டனர்.