×

“என் அம்மா சென்ற தினத்தன்று நானும் செல்கிறேன்”- உருக்கமான கடிதத்துடன் இளம்பெண் தற்கொலை

 

 

மறைமலைநகரில் தனியார் நிறுவன ஊழியர் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் நதியா (27) இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காந்தி நகரில்  வாடகை வீட்டில் தங்கி ஒரகடத்தில் உள்ள ஃபாக்ஸ் கான் என்கிற தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இவருடன் இவரது தோழி தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் தனது சொந்த ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு சென்றுவிட்டதால் தனிமையில் இருந்து வந்த நதியா என்பவர் தான் அனாதை போல் வாழ்வதாக உணர்ந்து  மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நதியாவின் தோழி கலைச்செல்வி நதியாவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது நதியா போன் எடுக்காததால் வீட்டின் உரிமையாளருக்கு போன் செய்து வீட்டில் சென்று பார்க்க சொல்லியிருக்கிறார். நதியா வின் வீட்டுக்கு சென்று பார்த்த போது நதியாவின் அறை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்தால் நீண்ட நேரமாக கதவை தட்டியும் நதியா கதவை திறக்கவில்லை. கதவைஉடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்த போது நதியா துப்பட்டாவை கொண்டு மின் விசிறியில் தூக்கு போட்டு  தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போலீசார், நதியாவின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் கடந்த 15.04.2018-ம் தேதி தனது அம்மா இறந்த நாளன்று தானும் இறப்பதாக  உருக்கமான
கடிதம் எழுதியுள்ள கடிதம் சிக்கியுள்ளது. போலீசார் இச்சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.