கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!
வேலூரில் கல்லூரி மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிய இளைஞர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர் மாவட்டம் தொரப்பாடி ராம்சேட் நகர் பகுதியை சேர்ந்த அப்சல் ஷரீப்புக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் அவரது மகள் ஆயிஷா பர்வீன் (19) என்பவர் டி கே எம் கல்லூரியில் ( Biotech ) உயிரி தொழில்நுட்பம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதற்காக ஆயிஷா பரவீன் வீட்டில் இருந்து புறப்பட்டு வந்துள்ளார். அப்போது பின் தொடர்ந்து வந்த அரியூர் ஜீவரத்தினம் பகுதியை சேர்ந்த வினோத் (19)இருச்சக்கர வாகனத்தில் வந்து வழிமறித்து தன் கையில் வைத்திருந்த கத்தியால் ஆயிஷா பர்வினை கழுத்து மற்றும் இடது பக்க வயிற்றில் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் ரத்த வெள்ளத்தில் கீழ விழுந்த ஆயிஷா பரவினை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆயிஷா பர்வினுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் சி எம் சி மருத்துவமனைக்கு அழைத்து வந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினர், ஆயிஷா பரவீனை கத்தியால் குத்தி சென்றது வினோத் என்பதும், அவர் 12ஆம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்ததும், ஆயிஷா பரவினை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாகவும், அந்தப் பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாகவும் அதற்கு அந்த பெண் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினோத் இந்த பெண்ணை பின் தொடர்ந்து கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி தனது வீட்டில் உள்ள பெட் ரூமில் தூக்குமாட்டி இறந்து இருந்துள்ளார். பின்பு வினோத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.