நிலாவில் 1 ஏக்கர் வாங்கி மனைவிக்கு பரிசளித்த இளைஞர்! இது சாத்தியமா?
நாமக்கல், ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளர் அசோக் சரவணன் (32), செப்டம்பர் 17 அன்று நடக்கவுள்ள தனது திருமணத்தை முன்னிட்டு, வருங்கால மனைவி ராதிகா (என்ற வர்ஷினி)-விற்கு நிலாவில் 1 ஏக்கர் நிலத்தை பரிசாக வாங்கியுள்ளார்.
சர்வதேச விண்வெளி ஒப்பந்தம் (Outer Space Treaty, 1967): ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சர்வதேச ஒப்பந்தப்படி, நிலவு மற்றும் விண்வெளியில் உள்ள எந்தவொரு கோளும் மனிதகுலத்தின் பொதுவான சொத்து. எந்தவொரு நாடோ, தனிநபரோ அல்லது தனியார் நிறுவனமோ நிலவில் உரிமை கோர முடியாது. இணையத்தில் Lunar Registry, Lunar Embassy போன்ற சில வெளிநாட்டுத் தனியார் நிறுவனங்கள் பணம் வாங்கிக்கொண்டு நிலவுக்கான "பட்டா/சான்றிதழ்" வழங்குகின்றன. இந்த ஆவணங்களுக்கு சர்வதேச சட்டத்திலோ, இந்திய சட்டத்திலோ எந்தவித சட்டப்பூர்வ மதிப்பும் (No Legal Validity) கிடையாது. சுருக்கமாகச் சொன்னால், கையில் கொடுக்கும் வெறும் காகிதச் சான்றிதழுக்காகப் பணத்தை வீணடிக்கும் ஒரு நவீன கால ஏமாற்று வித்தை என்றே சொல்லலாம்.
இந்நிலையில் நாமக்கல், ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளர் அசோக் சரவணன் (32), செப்டம்பர் 17 அன்று நடக்கவுள்ள தனது திருமணத்தை முன்னிட்டு, வருங்கால மனைவி ராதிகா (என்ற வர்ஷினி)-விற்கு நிலாவில் 1 ஏக்கர் நிலத்தை பரிசாக வாங்கியுள்ளார். லண்டனில் உள்ள தனது சகோதரியின் உதவியுடன் ஆன்லைன் மூலம் இந்த நிலத்தை வாங்கியுள்ளார். வழக்கமான நகைகள், கார்களுக்குப் பதிலாக நிலாவில் இடம் வாங்கிப் பரிசளித்த இவரை உறவினர்களும் பொதுமக்களும் ஆச்சர்யத்துடன் பார்த்துவருகின்றனர்.