இணையத்தையே கலக்கும் திருமண அழைப்பிதழ்! யாருக்கு கல்யாணம் ? தெரியுமா?
திரைப்படத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி இல்லத் திருமண விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்ககளுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டுவருகிறது. இந்த திருமண அழைப்பிதழ் தான் இணையத்தில் இன்றைய டிரெண்ட். ஒரு திருமண அழைப்பிதழ் விலை பரிசு பொருட்கள் அனைத்தும் சேர்த்து தோராயமாக 25000 ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செங்கோட்டையனுக்கு திருமண அழைப்பிதழ்!
— Brio News (@Brio__News) October 22, 2026
கண்ணன் ரவி, அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார்.#Sengottaiyan #KannanRavi #WeddingInvitation #TamilNadu #TamilNews #LatestNews #BreakingNews #ViralNews #BrioNews #MetroPeople pic.twitter.com/KMRBX8cb2N
யார் இந்த தொழிலதிபர் கண்ணன் ரவி?
திமுக முன்னாள் அமைச்சர் காட்பாடி துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மகள் செந்தாமரையை நவம்பர் மாதம் திருமணம் செய்ய போகும் தீபக்ரவியின் தந்தை தான் இந்த துபாய் பினாமி தொழிலதிபர் கண்ணன் ரவி. ஐக்கிய அரபு அமீரகத்தில் பினாமி சொத்துக்கள் அனைத்தையும் நிர்வாகம் செய்து கடந்த 20 வருடங்களாக திமுக பினாமி தொழில் நிறுவனங்களை துபாயில் நடத்தி வரும் தொழில் அதிபர் தான் இந்த கண்ணன் ரவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தயாரிப்பாளராகவும் அறியப்பட்டவர்.
தற்போது மகன் கல்யாணத்திற்காக திருமண அழைப்பிதழை பல கோடி ரூபாய்க்கு அச்சடித்து இந்தியா முழுவதும் உள்ள தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகிறார் இந்த கண்ணன் ரவி.