×

தவெக தலைவர் விஜய்க்கு வேல் பரிசாக கொடுத்த தொண்டர்.. அன்பாக வாங்கிகொண்ட விஜய்..!

 

புதுச்சேரிக்கான சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களை உள்ள நிலையில் புதுச்சேரிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்

மிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏப்ரல் 5ம் தேதி 23 இடங்களில் பிரச்சாரம் நடத்த புதுச்சேரி காவல்துறையினரிடம் அனுமதி கூறியிருந்தது. ஆனால், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்று கூறி, தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் ஏப்ரல் 4-ம் தேதி விஜய் பரப்புரையை நடத்திக் கொள்ள வலியுறுத்தினர். இதனை ஏற்றுக் கொண்ட தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். 

புதுச்சேரி காவல்துறை விதித்த 11 நிபந்தனைகள்:

  • விஜய் பிரச்சாரம் செய்ய நான்கு இடங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
  • கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு வரும்போது கொக்கு பார்க், வெங்கடாசுப்பா ரெட்டி சிலை சதுரங்கம், தவளைகுப்பம் சந்திப்பு, வில்லியனூர்- கூடப்பாக்கம் சந்திப்பு ஆகிய இடங்களில் மட்டும் வேனில் இருந்தபடி பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • குறிப்பாக பிரச்சாரம் காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து மதியம் 1.30 மணிக்கு முடிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு இடத்திலும் சுமார் 2000 பேர் மட்டுமே கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்திலிருந்து ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் வரக்கூடாது.
  • புதுச்சேரி மக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
  • விஜய் பேசும் இடங்களுக்கு கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை அழைத்து வர அனுமதியில்லை.
  • மேலும் குடிநீர் பாட்டில்கள் பிஸ்கட் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • அனுமதி கிடைத்த இடங்களில் மட்டும் பேனில் மேல் நின்று பேச வேண்டும் மற்ற இடங்களில் ஏறக்கூடாது.
  • ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பிரச்சார பேனை பின் தொடரக்கூடாது
  • நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பிரச்சாரம் முடிந்த பின்னர் சென்னை திரும்ப வேண்டும்.

புதுச்சேரியில் விஜய் :

புதுச்சேரி வந்த விஜய்க்கு அவராவது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர்.அப்போது ஒரு ரசிகர் அண்ணா அண்ணா ஒரு ஆட்டோகிராப் என அன்புடன் கேட்க அதற்கு விஜய்யும் ரசிகர் கொடுத்த தனது புகைப்படத்தில் கையெழுத்திட்டு கொடுத்தார்.

அதே போல்  புதுச்சேரி வந்த தவெக தலைவர் விஜய்க்கு வேல் பரிசாக கொடுத்த தொண்டர்.. அதையும் அன்பாக வாங்கி கொண்டார்.