TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!
TNPSC CTSE Interview Posts II 2025 அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 76 காலிப்பணியிடங்களை நிரப்ப இன்று (டிசம்பர் 22) முதல் விண்ணப்பம் தொடங்கப்படுகிறது.
காலிப்பணியிடங்களின் விவரம்
| பதவியின் பெயர் | துறை | எண்ணிக்கை |
| கணக்கு அலுவலர் நிலை - II | கருவூலங்கள் மற்றும் கணக்குகள் | 8 |
| வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) | வேலாண்மை | 26 |
| உதவி மேலாளர் (கணக்கு) | தமிழ்நாடு போக்குவரத்துத்துறை | 9 |
| உதவி மேலாளர் | போக்குவரத்துத்துறை | 3 |
| முதுநிலை கணக்கு அலுவலர் | சென்னை பெருநகர் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் கழகம் | 1 |
| மேலாளர் நிலை II (நிதி) | தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் | 1 |
| முதுநிலை அலுவலர் (நிதி) | தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் | 21 |
| முதுநிலை அலுவலர் (சட்டம்) | தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் | 1 |
| மேலாளர் (இயந்திரவியல், சந்தைவியல்) | தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் | 2 |
| துணை மேலாளர் (மின்னியல், இயந்திரவியல், பொருட்கள்) | தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் | 3 |
| உதவி மேலாளர் (பொருட்கள்) | தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் | 1 |
| மொத்தம் | 76 |
வயது வரம்பு
01.07.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் 21 வயதை நிறைவுப் பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு கிடையாது. பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு பின்பற்றப்படும். கைப்பெண்களுக்கு எந்த வகுப்பை சேர்ந்தவராக இருப்பினும் வயது வரம்பு கிடையாது.
கல்வித்தகுதி
இத்தேர்வின் மூலம் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு வேளாண்மையில் முதுகலை பட்டப்படிப்பு, CA/ICWA, இளங்கலை சட்டப்படிப்பு, மார்க்கெட்டிங் எம்பிஏ, மெக்கானிக்கல் மற்றும் மெக்கானிக்கல் பொறியியலுடன் மெட்டிரியல் மேனேஜ்மெண்ட் டிப்ளமோ, எலெக்ட்ரிக்கல் பொறியியல் ஆகிய கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேளாண்மை உதவி இயக்குநர், உதவி மேலாளர், கணக்கு அலுவலர் நிலை III, மேலாளர் நிலை III, முதுநிலை அலுவலர் ஆகிய பதவிகளுக்கு அனுபவம் தேவையில்லை. இதர பதவிகளுக்கு அனுபவம் அவசியமாகும்.
மார்ச் மாதம் தேர்வு
நேர்முகத் தேர்வு அடங்கிய பதவிகளுக்கான ஒங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இப்பணியிடங்களுக்கு 2 தாள்கள் கொண்டு தேர்வு நடைபெறும். முதல் தாளில் தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு மற்றும் நுண்ணறிவு இடம்பெறும். இரண்டாம் தாளில் முதன்மை பாடம் இடம்பெறும். தமிழ் பகுதி தகுதி தாள் மட்டுமே, குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் பெற வேண்டும். இதர பாகங்களில் பெறப்படும் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். மொத்தம் 450 மதிப்பெண்களுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி அமையும்.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ந்து, நேர்முகத் தேர்விற்கு தகுதிப் பெறுவார்கள். நேர்முகத் தேர்வு 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மொத்தம் 510 மதிப்பெண்களில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாராகும். இத்தேர்வு கணினி வழியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி-யின் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். https://apply.tnpscexams.in/ என்ற இணைப்பின் மூலம் OTR பதிவை மேற்கொண்டு பின்னர் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே பதிவு பெற்றவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 20.01.2026 |