☰
×

16 வயது சிறுவனின் கண்ணுக்கு மேல் வளர்ந்த பல்! 

 

 

உலகிலேயே முதல் முறையாக, அரிதினும் அரிதான Ectopic tooth என்ற கண் இமைகளின் மேல் பல் வளரும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார் மதுரையை சேர்ந்த 16 வயது சிறுவன்.

மதுரையில் 16 வயது சிறுவனின் கண்ணுக்கு மேல் பல் வளர்ந்திருப்பது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது மிகவும் அரிதான மருத்துவ நிகழ்வாகக் கருதப்படுகிறது. சிறுவனின் இடது கண்ணின் மேற்பகுதியில் முதலில் வலியில்லாத வீக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்தப் பகுதியில் வெள்ளை நிறத்தில் கடினமான முனைகள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன. இதையடுத்து மருத்துவமனைக்குச் சென்ற சிறுவனுக்கு CT ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனையில், கண்ணின் மேற்புறப் பகுதியில் வழக்கத்திற்கு மாறான இடத்தில் பல் உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பல்லை அகற்றினர்.

பொதுவாகப் பற்கள் தாடைப் பகுதியில் உருவாகும். ஆனால், சில அரிய மருத்துவ நிலைகளில் பற்கள் உடலின் வேறு பகுதிகளிலும் உருவாகலாம். இதற்கு மருத்துவ மொழியில் Ectopic Tooth என்று பெயர்.கண்ணின் மேற்புறப் பகுதியில் பல் உருவாகியிருப்பது மிகவும் அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ வரலாற்றிலேயே இப்படி ஒரு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர்தான் என கூறப்படுகிறது  இப்படி நிகழ என்ன காரணம் என மருத்துவர்களால் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், வெற்றிகரமாக அப்பற்கள் அகற்றப்பட்டுள்ளன