சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து +2 மாணவி உயிரிழப்பு
திருவள்ளூர் அருகே சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகன உடன் விழுந்து பள்ளி மாணவி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அடுத்த ராமலிங்கபுரம் சீனிவாசபுரம், பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன், சரளா, தம்பதியினர் இவர்களுடைய மகள் காவியா (16). இவர் திருவள்ளூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய சகோதரன் பிரவீன் உடன் இருசக்கர வாகனத்தில் பென்னலூர் பேட்டை, சீனிவாசபுரம், பகுதியில் உள்ள அவருடைய சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது பூண்டி அடுத்த ஒதப்பை பகுதியில் எதிரே அதி வேகத்தில் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதுவது போல் வந்துள்ளது. அப்போது நிலை தடுமாறிய காவியாவின் சகோதரன் பிரவீன், திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையின் இருபுறமும் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் காவியாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அவரை அவரை மீட்டர் பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் காவியா, இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது சகோதரன் பிரவீன், லேசான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனை தொடர்ந்து காவியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை உடற்கூராய்வு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கண்டு வருகின்றனர்.