கோலம் போட்டபோது கடித்த பாம்பு...கேரி பேக்கில் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற பெண்
Aug 6, 2025, 21:36 IST
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெண்மணி ஒருவரை பாம்பு கடித்த நிலையில் அவர் பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கும்பங்குளம் தோப்புக்கொல்லையைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி ஜெயலட்சுமி என்பவர் இன்று வீட்டு வாசலை கூட்டிக் கொண்டிருந்தபோது அவரது கையில் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியில் ஜெயலட்சுமி அலரவே உடனடியாக அங்கிருந்த அவரது கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் ஜெயலட்சுமி கடித்த கட்டுவிரியன் பாம்பை அடித்து பையில் போட்டதோடு உடனடியாக ஜெயலட்சுமி சிகிச்சைக்காக ஆலங்குடி அரச மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பாம்புடனே அவர்களும் சிகிச்சைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து ஜெயலட்சுமிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.