மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி?
Sep 9, 2026, 18:21 IST
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக கூட்டணி கட்சி கூட்டம் நிறைவு பெற்றது.
பனையூா் தவெக தலைமை அலுவலகத்தில் முதல்வா் விஜய் தலைமையில் நடந்த தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம் நிறைவடைந்தது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக ஆதரவு கட்சிகள் உடனான 2வது கட்ட ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. கூட்டணிக்கு பெயர் வைப்பது, ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் தேர்வு, இடைத்தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. தவெக கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி என பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.