☰
×

ஒரு நொடி அலட்சியம்... தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு...!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம், சமாகண்டி சௌக் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-16-ல் புதன்கிழமை மாலை நிகழ்ந்த தொடர் விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் வியாழக்கிழமை உயிரிழந்தனர். இதனால் இக்கொடூர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வினோத் குமார் (40) மற்றும் நவுலி கிராமத்தைச் சேர்ந்த லக்ஷ்மிதர் கவுடா (45) ஆகிய இருவர் எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் எனச் சமாகண்டி காவல் நிலைய ஆய்வாளர் ஷ்ரத்தாஞ்சலி சுபுதி தெரிவித்துள்ளார். உயிரிழந்த வினோத் குமார் சமாகண்டி அருகே உள்ள கேவடா (தாழம்பூ) பதப்படுத்தும் ஆலையில் பணியாற்றி வந்தவர் ஆவார்.

முன்னதாக, புதன்கிழமை மாலை விபத்து நடந்த சம்பவ இடத்திலேயே சத்ரபூர் மாவட்ட கருவூல அலுவலக ஊழியரான பெர்ஹாம்பூரைச் சேர்ந்த ரோஜாலினி மிஸ்ரா (42) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் அலுவலகப் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய போது இந்தத் துயரம் நேர்ந்துள்ளது.

சத்ரபூர் பகுதியிலிருந்து வந்த லாரி ஒன்று, முன்னால் சென்ற கார் திடீரெனப் பாதை (Lane) மாறியதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தேசிய நெடுஞ்சாலை 16-ன் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. இதில் லாரியும் காரும் சாலையை விட்டு விலகி, ஓரத்தில் நின்றிருந்த பல இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிச் சாய்ந்தன.

இந்த விபத்தில் மேலும் 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் சுதீபா தாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த உள்ளூர் பொதுமக்கள், அடிக்கடி விபத்துகள் நடக்கும் இப்பகுதியில் மேம்பாலம் கட்டக் கோரி தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கஞ்சம் எஸ்பி ஹரிஷ் பிசி மற்றும் சத்ரபூர் எம்.எல்.ஏ கிருஷ்ண சந்திர நாயக் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. விபத்தில் சேதமடைந்த லாரி, கார் மற்றும் 5 இருசக்கர வாகனங்களைக் கைப்பற்றிய காவல்துறையினர், தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

இவ்விபத்தில் 3 பேர் உயிரிழந்ததற்கும் 8 பேர் காயமடைந்ததற்கும் பெர்ஹாம்பூர் எம்பி பிரதீப் குமார் பாலிகிரஹி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகக் கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தரச் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவ அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Berhampur - At least three people were killed and six others critically injured after a speeding truck rammed into multiple vehicles at Chamakhandi Chhak in Odisha’s Ganjam district, the accident occurred on the National Highway under the jurisdiction of Chamakhandi police station. The truck reportedly lost control while attempting to overtake another truck and crashed into five motorcycles, a scooter and a car. CCTV footage of the incident shows a car crossing the road at Chamakhandi Chhak

— NextMinute News (@nextminutenews7) October 15, 2026