×

ஒரு நொடி கவனக்குறைவு... பறிபோன பிஞ்சு உயிர்! தெலங்கானாவில் உறைவிக்க வைக்கும் துயரம்!

 

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடெம் மாவட்டம், ஜூலூருபாடு மண்டலத்திற்குட்பட்ட வினோபா நகர் கிராமத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கதவு தற்செயலாகப் பூட்டிக் கொண்டதில், உள்ளே சிக்கிய 4 வயதுச் சிறுமி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

வினோபா நகர் கிராமச் பஞ்சாயத்துத் தலைவர் (சர்பஞ்ச்) கங்காவத் நவீன் என்பவரின் 4 வயது மகள் தன்விஸ்ரீ. நேற்று வீட்டின் அருகில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளார். சிறுமி உள்ளே சென்றதை யாரும் கவனிக்காத நிலையில், காரின் கதவு தானாகப் பூட்டிக் கொண்டது.

விளையாடச் சென்ற குழந்தை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடத் தொடங்கினர். சுமார் 2 மணி நேர தீவிரத் தேடலுக்குப் பிறகு, அக்கம் பக்கத்தினர் சிலர் காரின் முன் இருக்கைகளுக்கு நடுவில் சிறுமி மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாகக் காரின் கண்ணாடிகளை உடைத்துச் சிறுமியை மீட்டு, சிகிச்சைக்காகக் கொத்தகூடெம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். காரின் கதவுகள் பூட்டப்பட்டதால் ஏற்பட்ட காற்றுப் பற்றாக்குறை (மூச்சுத்திணறல்) காரணமாகவே சிறுமி உயிரிழந்திருக்கலாம் எனப் போலிசார் சந்தேகிக்கின்றனர்.

பெற்றோர்களுக்குக் காவல்துறை அவசர எச்சரிக்கை!

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு அருகில் குழந்தைகள் தனியாக விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும், காரைப் பூட்டுவதற்கு முன்பாக உள்ளே குழந்தைகள் யாரேனும் இருக்கிறார்களா என்பதைப் பெற்றோர் மற்றும் வாகன ஓட்டிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

ஏற்கனவே தெலங்கானா மாநிலத்தில் நல்கொண்டா மற்றும் ரங்காரெட்டி மாவட்டங்களில் இதுபோன்று காருக்குள் சிக்கி சிறுவர், சிறுமியர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், இப்போதைய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

A four-year-old girl allegedly died after getting trapped inside a parked car near her home in Vinayaknagar, Bhadradri-Kothagudem district, Telangana, on Sunday.

The child, identified as Tanvi Sree, reportedly went out to play and entered the stationary car parked outside her… pic.twitter.com/ky7OuI2xGY

— IndiaToday (@IndiaToday) September 21, 2026


 

A four-year-old girl allegedly died after getting trapped inside a parked car near her home in Vinayaknagar, Bhadradri-Kothagudem district, Telangana, on Sunday.

The child, identified as Tanvi Sree, reportedly went out to play and entered the stationary car parked outside her… pic.twitter.com/ky7OuI2xGY

— IndiaToday (@IndiaToday) September 21, 2026