பிரேமலு மாதிரி மீண்டும் ஒரு பள்ளிப்பருவ காதல் படம்..! வெளியான ‘வித் லவ்’ டிரைலர்..!
Jan 31, 2026, 05:40 IST
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள 'வித் லவ்' (With Love) திரைப்படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகிறது.இந்த படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் மகேஷ் இணைந்து தயாரித்துள்ளனர். டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்கியுள்ளார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் 'அய்யோ காதலே', 'மறந்து போச்சே' பாடல்கள் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், 'வித் லவ்' படத்தின் டிரெய்லரை இயக்குநர் அட்லீ வெளியிட்டார். இப்படம் பிப்ரவரி 6ந் தேதி வெளியாகிறது.