முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள்... சட்டப்பேரவையில் சி.வி.சண்முகம் முக்கிய வேண்டுகோள்..!!
Sep 3, 2026, 12:48 IST
இன்றைய GenZ தலைமுறையினருக்கு 'மெட்ராஸ்' என்ற பழைய பெயர் குறித்து பெரியளவில் தெரியவில்லை என்பதால், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை 'தமிழ்நாடு உயர்நீதிமன்றம்' என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் (இன்று செப்.3) வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து முதல்வர் கோரிக்கை வைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
#WATCH | "சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டு வர வேண்டும்"
— Sun News (@sunnewstamil) September 3, 2026
சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கோரிக்கை#SunNews | #TNAssembly | #ADMK | #CVShunmugam pic.twitter.com/g2ttNICKMK