×

முதலமைச்சர் ப்ரோ! திருச்சியில் கத்தியது போல சட்டமன்றத்தில் பதில் உரை ஆற்ற என்ன தயக்கம்?- ஆ.ராசா

 

திருச்சியில் கத்தியது போல சட்டமன்றத்தில் பதில் உரை ஆற்ற என்ன தயக்கம்? யார் எழுதிக்கொடுத்த வசனம்? என முதலமைச்சர் விஜய்க்கு திமுக எம்.பி.ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி.ஆ.ராசா, “முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்திக்க மறுப்பது ஏன்? செய்தியாளர்களை சந்திப்பது முதல்வரின் கடமைகளில் ஒன்று... நன்றி சொல்லும் கூட்டத்தில் அரசியல்.. திருச்சியில் எள்ளலும், துள்ளலுமாக பேசினார் முதலமைச்சர் விஜய்.. அல்லு சில்லு வீட்டுக்கு சென்றது தில்லு முல்லு இல்லையா? திருச்சியில் கத்தியது போல சட்டமன்றத்தில் பதில் உரை ஆற்ற என்ன தயக்கம்? யார் எழுதிக்கொடுத்த வசனம்? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. மாண்புமிகு முதலமைச்சர் ப்ரோ! எதாவது பண்ணுங்க ப்ரோ... இப்படியே போனால் நல்லா இருக்காது ப்ரோ. தவெக தூய சக்தி அல்ல, துப்பில்லாத சக்தி. பிரதமருக்கு முன்னாள் உங்களின் சக்தி எங்கே போனது? மேகதாது பிரச்சனையில் சிவக்குமாருக்கு உங்களின் பதில் என்ன? ஆட்சியைதான் 6 மாதங்கள் கழித்து விமர்சிப்போம் எனச் சொன்னோம். உங்கள் இயலாமையை Day to Day நிர்வாக குறைபாடுகளை விமர்சிக்க மாட்டோம் என நாங்களும் சொல்ல முடியாது... நீங்களும் கேட்க முடியாது.

கை, கால் எல்லாம் ஆட்டி பேசுறீங்களே, சட்டமன்றத்தில் எங்க போச்சு உங்க BODY LANGUAGE ...ஏன் PRESS -அ பாக்காம போறீங்க? இவ்வளவு கொலைகள், கொள்ளைகள், பாலியல் குற்றங்கள் நடக்கிறது. நாங்கள் வந்தவுடன் அனைத்தையும் சரி செய்துவிடுவோம் என்றீர்களே... நிதிநிலைமையை சீர் செய்வதற்கு 6 மாதங்களுக்கு மேல் கூட ஆகலாம். சட்டம், ஒழுங்கிற்கு என்ன பிரச்சனை? காவல்துறை உங்கள் கையில்தானே இருக்கிறது. அதற்கு ஏன் கால அவகாசம் தேவைப்படுகிறது? சட்டமன்றத்தில் தளர்வு, சோர்வு, மயக்கம், இயலாமை.. ஆனால், திருச்சியில் ஏன்  வீர வசனம்.. அதை எழுதிக்கொடுத்தது யார்? தான் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்குப் பொருத்தமானவராக இல்லாமல், தன் தகுதியைக் குறைத்துக்கொண்டு வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறார்.” என்றார்.