×

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி..! மார்ச் மாதம் பள்ளிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை..!

 

மார்ச் மாதத்திலும் மாணவர்களுக்கு 8 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதோடு சேர்த்து சில பண்டிகை விடுமுறைகளும் பொது விடுமுறைகளும், மார்ச் மாதத்தில் கிடைக்க உள்ளது. தமிழக அரசின் பொது விடுமுறை பட்டியலில் மார்ச் மாதத்திற்கான விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 19ஆம் தேதி வியாழக்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு காரணமாக விடுமுறை அளிக்கப்படும். மேலும் மார்ச் 21ஆம் தேதி சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகையின் காரணமாக விடுமுறை கிடைக்கும். அதே போல மார்ச் 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மகாவீரர் ஜெயந்தியின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கும். 

மார்ச் 19 - வியாழக்கிழமை - தெலுங்கு வருடப்பிறப்பு (உகாதி)

மார்ச் 21 - சனிக்கிழமை - ரம்ஜான் பண்டிகை

மார்ச் 31 - செவ்வாய்க்கிழமை - மகாவீர் ஜெயந்தி

வார விடுமுறைகள் மற்றும் இந்த மூன்று பொது விடுமுறைகளை சேர்த்தால் மொத்தமாக 11 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு பல்வேறு விடுமுறைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்ததால், மாணவர்கள் வருத்தத்திற்கு ஆளானார்கள். இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை வருவதால் ஒரு விடுமுறை மிஸ் ஆகிவிட்டது என்றும் வருத்தம் அடைந்து வருகின்றனர். இருப்பினும் ஒட்டுமொத்தமாக 11 நாட்கள் விடுமுறை கிடைப்பது மகிழ்ச்சியான ஒன்று தான். 

உள்ளூர் விடுமுறைகள் 

அரசு அறிவித்துள்ள பொது விடுமுறைகளைத் தாண்டி ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறைகள் அளிக்கவும் வாய்ப்புள்ளது. மார்ச் மாதங்களில் இருந்து பல்வேறு கிராமங்களில் திருவிழாக்கள் நடைபெறும் என்பதால் அந்தந்த மாவட்டத்திற்கு விடுமுறையை மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கலாம். பொது விடுமுறைகள் கிடைக்கும் நாட்களுக்கு பதிலாக மார்ச் மாதத்தில் வேறு சில நாட்களில் வேலை நாட்களாக கருதப்படும். 

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு பொருந்தாது

மார்ச் மாதத்தில் இத்தனை நாட்கள் விடுமுறை வந்தாலும், இது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முழுமையாக பொருந்தாது. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி கடைசி வாரம் வரை நடைபெறும். எனவே, பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இந்த உள்ளூர் மற்றும் பொது விடுமுறைகள் பொருந்தாது என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை என்பதால், அவர்களுக்கு இந்த 11 நாட்கள் விடுமுறை பொருந்தும்.