அதிவேகமாக பரவும் புதிய வகை கொரோனா- அறிகுறி என்ன?
Nov 13, 2026, 15:23 IST
BJ.2.1 எனப்படும் புதிய வகை கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவி வருகிறது.
BJ.2.1 எனப்படும் புதிய வகை கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவி வருகிறது. வட அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பரவியுள்ளது. முந்தைய வகை வைரஸ்களுடன் ஒப்பிடும்போது, செல்களை எளிதாக ஊடுருவுவதாகக் கூறப்படுகிறது. கடுமையான தொண்டை வலி, தலைச்சுற்றல் ஆகியவை குறிப்பிடத்தக்க அறிகுறிகளாகக் கூறப்படுகின்றன.
காய்ச்சல், இருமல், சளி, மூக்கடைப்பு, தலைவலி, தசைவலி ஆகியவையும் ஏற்படலாம். வேகமாகப் பரவினாலும், இதுவரை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதாக உறுதி செய்யப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.