×

வேளச்சேரி ரயில் நிலைய வளாகத்தில் வருகிறது புதிய உள் விளையாட்டு அரங்கம்!

 

வேளச்சேரி ரயில் நிலைய வளாகத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான டெண்டரை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

வேளச்சேரி புறநகர் ரயில் நிலையத்தில் உள்ளரங்கு விளையாட்டுத்திடல் அமைக்கப் போவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் புதிய முயற்சியாக வேளச்சேரி ரயில் நிலையத்தில்  உள் விளையாட்டரங்கம் அமைக்க, ஒப்பந்தப்புள்ளி கோரியது தெற்கு ரயில்வே. ரயில் நிலையத்தில் பயன்படுத்தப்படாத இடத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டணம் அல்லாத வருவாயை அதிகரிக்க முடியும். டெண்டர் செயல்முறை IREPS போர்ட்டலில் (http://ireps.gov.in) மின்னணு ஏலம் மூலம் நடத்தப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.