×

கல்குவாரியில் பிணமாக மிதந்த தாய், மகள்... துணிதுவைக்க சென்ற போது நேர்ந்த சோகம்

 

மணப்பாறை அருகே கல்குவாரியில் துணிதுவைக்க சென்ற போது தாயும், மகளும் உயிரிழந்தார். 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த யாகபுரம் அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் உலகநாயகி (35). விராலிமலையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரியும் புரிந்து வருகிறார். இவரது மகள் ஜெயஸ்ரீ (11). இருவரும் நேற்று மாலை அதே பகுதியில் குறத்தி மலை அய்யனார் கோவில் அருகே செயல்படாமல் இருக்கும் கல்குவாரி பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் துணி துவைக்க சென்றதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் இருவரும் நேற்று இரவு வீடு திரும்பாத நிலையில் இன்று காலை குவாரி நீரில் பிணமாக மிதந்ததனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் இறந்த இருவரின் சடலச்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.