×

 3 கோடி ரூபாயில் ஒரு மினி ஸ்டேடியம் கட்டவே முடியாது - அமைச்சர் ஆதவ்..!

 

திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் ஸ்டேடியம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கேட்டுக்கொண்டாரர். இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,

“234 தொகுதிகளிலும் ஒரு மினி ஸ்டேடியம் கட்டப்படும் என கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அது குறித்து தற்போதைய ஆட்சியில் 100 நாட்களாக ரிவ்யூ செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கரூரில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான ஆய்வை மேற்கொள்ளப்பட்டது. 3 கோடி ரூபாயில் ஒரு மினி ஸ்டேடியம் கட்டவே முடியாது. சட்டமன்ற உறுப்பினர் 50 லட்சம் ரூபாயை தனது மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கி உள்ளார். இருப்பினும் ஸ்டேடியத்தில் ஒரு டிராக் அமைப்பதற்கு மட்டுமே 10 கோடி ரூபாய் செலவாகும். ஆகையால் அந்தத் திட்டமானது மறு ஆய்வு செய்யப்பட்டு மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறைந்த நிதியில் கட்டினால் பெயரளவில் மட்டும் ஒரு ஸ்டேடியம் கட்டப்படுமே தவிர அதை யாரும் முழுமையாக பயன்படுத்த முடியாது. இதுதான் உண்மையான நிலவரம். ஆகையால் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 10 முதல் 12 கோடி ரூபாய் அளவில் தொகையை உயர்த்தி, குறைந்தபட்சம் சட்டமன்ற உறுப்பினரிடம் இருந்து பணத்தை பெறாமலேயே, அரசே அந்த தொகையை வழங்கி ஸ்டேடியம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தொகுதிவாரியாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மேம்பாட்டு நிதிகளை பள்ளிக்கூடங்களில் இடிந்த நிலையில் இருக்கும் கட்டடங்களை சீரமைப்பதற்காக பயன்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.