×

புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய ஒருவர் பீகாரில் கைது

 

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து பரப்பப்படும் வதந்தியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் வட மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை ஆய்வு மேற்கொள்ளும் விதமாக நேற்றைய தினம் பீகார் மாநிலத்திலிருந்து வந்த குழுவினர் திருப்பூர் மற்றும் கோவையில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் பாதுகாப்பு மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்தனர். இதனிடையே புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி பரப்பிய பீகார் ஜாமி மாவட்டத்தை சேர்ந்த அமன் என்பவர் கைது செய்யப்பட்டார். திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டுள்ளது என அம்மாநில காவல்துறை விளக்கமளித்துள்ளனர். மேலும் போலி வீடியோக்களை நீக்க ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் நிறுவனங்களுக்கு பீகார் காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. 

மேலும் தமிழ்நாடு தொடர்பாக வதந்தி பரப்பியதாக மேலும் 4 பேர் மீது வழக்குப்பதிவு புரளியை கிளப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் கூடுதல் டிஜிபி ஜிதேந்திர சிங் கங்குவார் எச்சரித்துள்ளார். பீகாரில் இருந்து தனிப்படை போலீசார் தமிழ்நாடு வருகை தந்துள்ளனர். ஹோலி பண்டிகைக்காக மட்டுமே தொழிலாளர்கள் ஊருக்கு செல்கிறார்கள் என்றும் அச்சப்படும் சூழல் எதுவும் இல்லை என்றும் பீகார் காவல்துறை கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.