×

வாக்குவாதத்தில் காவலரை சரமாரியாக கத்தியால் குத்திய நபர்..முன்விரோதம் காரணமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் புங்கலிங்கம்(31). இவர் வடபாகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். புங்கலிங்கம் நேற்று தூத்துக்குடி பாளை ரோட்டில் இருக்கும் எம்ஜிஆர் பூங்காவில் நடந்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த நபர் ஒருவருக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாற, அந்த நபர் புங்கலிங்கத்தை தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அதில் படுகாயம் அடைந்த புங்கலிங்கம் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்ததை கண்ட பொதுமக்கள், அவரை
 

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் புங்கலிங்கம்(31). இவர் வடபாகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். புங்கலிங்கம் நேற்று தூத்துக்குடி பாளை ரோட்டில் இருக்கும் எம்ஜிஆர் பூங்காவில் நடந்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த நபர் ஒருவருக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாற, அந்த நபர் புங்கலிங்கத்தை தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அதில் படுகாயம் அடைந்த புங்கலிங்கம் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்ததை கண்ட பொதுமக்கள், அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கத்தியால் பலமாக தாக்கியதால் தற்போது புங்கலிங்கம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் புதுக்கோட்டை அருகே உள்ள மறவன்மடம் புரத்தை சேர்ந்த செல்வம் என்பவர் தான் புங்கலிங்கத்தை கத்தியால் குத்தினார் என்பது தெரிய வந்துள்ளது. இதானியயடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த எம்ஜிஆர் பூங்காவில் இவர் காவலாளி ஆக இருப்பதாக கூறியுள்ளார். முன்விரோதத்தால் இந்த கொலை முயற்சி நடந்துள்ளதா என விசாரணை தொடர்ந்து வருகிறது.