இப்படியா மரணம் வரும்? படிக்கட்டு சுவர் இடிந்துவிழுந்து வாலிபர் பலி
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வீடு கட்டுமான பணியின் போது படிக்கட்டு சுவர் இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட காயிதே மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் சுல்தான். இவர் வீட்டில் பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிக்காக கெங்குவார்பட்டி பகவதி நகரைச் சேர்ந்த காமாட்சி (38) என்பவர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் முன்பு உள்ள வாசல் படிக்கட்டுகள் உடைந்து விழுந்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி காமாட்சி இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இடிபாடுகளுக்குள் சிக்கிய கூலித் தொழிலாளியை அங்கிருந்த மக்கள் மீட்கும் பணியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து பெரியகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு கட்டிட ஈடிபாடுக்குள் சிக்கிய கூலித் தொழிலாளி காமாட்சி சடமாக மீட்கப்பட்டார். பின்னர் காமாட்சியின் உடலை பெரியகுளம் காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.