×

‘கட்டிலில் படுத்துக் கொண்டு அடாவடியாக வட்டி வசூல்’: வசமாக சிக்கிய நிதி நிறுவன ஊழியர்!

வேடசந்தூர் அருகே கடன் வசூலிக்க வந்த நபர் கட்டிலில் படுத்துக் கொண்டு அடாவடி செய்ததால், போலீசார் அவரை கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காக்காயன்குளம் பகுதியில் வசித்து வருபவர் முத்துலட்சுமி. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.60 ஆயிரம் கடன் பெற்று அதற்கு வட்டி செலுத்தி வந்திருக்கிறார். கொரோனா காலத்தில் அவர் கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் தவித்த வந்த நிலையிலும், நிதி நிறுவனம் சார்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், முத்துலட்சுமி
 

வேடசந்தூர் அருகே கடன் வசூலிக்க வந்த நபர் கட்டிலில் படுத்துக் கொண்டு அடாவடி செய்ததால், போலீசார் அவரை கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காக்காயன்குளம் பகுதியில் வசித்து வருபவர் முத்துலட்சுமி. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.60 ஆயிரம் கடன் பெற்று அதற்கு வட்டி செலுத்தி வந்திருக்கிறார். கொரோனா காலத்தில் அவர் கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் தவித்த வந்த நிலையிலும், நிதி நிறுவனம் சார்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், முத்துலட்சுமி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நிதி நிறுவன ஊழியர் ஒருவர் பணத்தை திருப்பி தராவிடில் இங்கிருந்து செல்ல மாட்டேன் என கட்டிலில் படுத்துக் கொண்டு அராஜகம் செய்திருக்கிறார். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் போட்டோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதால், அந்த போட்டோ வைரலாகி திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கவனத்துக்கு சென்றுள்ளது.

இதனையடுத்து, முத்துலட்சுமி வீட்டில் அராஜகன் செய்த ஊழியர் மணிமுத்துவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொரோனா காலத்தில் வட்டி வசூலிக்க கூடாது என அரசு உத்தரவிட்டும், அதனை மீறி அடாவடியாக பணம் கேட்ட தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.