☰
×

மதுரை ரயில் நிலைய உச்சியில் தீபம் ஏற்றப்படும்- அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

 

புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலைய உச்சியில் தீபம் ஏற்றப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். 

சென்னையில் நடைபெற்ற அரசியலமைப்பு தின நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அஷ்வினி வைஷ்ணவ், "வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. உண்மையில் இந்த நடைமுறையில் தவறுகள் இருந்திருந்தால், கேரளத்தில் யார் ஆட்சி அமைத்திருப்பார்கள்? தற்போது யார் ஆட்சி அமைத்தது? இந்திய ரயில்வே சேவையை சர்வதேச தரத்திற்கு உயர்த்த அரசு உறுதி பூண்டுள்ளது. நாடு முழுக்க ரயில்வே திட்டணக்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு ஒத்துழைத்தால் அனைத்து ரயில்வே திட்டங்களும் விரைந்து முடிக்கப்படும்.  புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலைய உச்சியில் தீபம் ஏற்றப்படும்" என்றார்.