×

குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தும் கர்ப்பமான மனைவி: ஷாக் ஆன கணவன்!

சத்தியமங்கலம் அருகே குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண், மீண்டும் கர்ப்பமானதால் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதூரில் வசித்து வரும் தம்பதி மகேந்திரன் – வைஜெயந்தி (24 ). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் வைஜெயந்தி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாக சோர்வுடன் இருந்த வைஜெயந்தி, மருத்துவமனையில் பரிசோதித்ததில் அவர் 5
 

சத்தியமங்கலம் அருகே குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண், மீண்டும் கர்ப்பமானதால் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதூரில் வசித்து வரும் தம்பதி மகேந்திரன் – வைஜெயந்தி (24 ). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் வைஜெயந்தி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாக சோர்வுடன் இருந்த வைஜெயந்தி, மருத்துவமனையில் பரிசோதித்ததில் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

அதிர்ச்சி அடைந்த வைஜெயந்தி, அறுவை சிகிச்சை செய்து கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று முறையிட்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்தும் கர்ப்பமானது எப்படி? அரசு மருத்துவமனையில் இது போன்ற கோளாறு நடப்பது ஏன்? என சரமாரியாக கேள்வியை முன்வைத்துள்ளனர். மேலும், ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் 3 ஆவது குழந்தையை வளர்க்க முடியாது என்றும் இதற்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதில் அளித்த மருத்துவமனை தரப்பு, ஒரு சில நேரத்தில் இது போன்று எதிர்பாராத விதமாக நடப்பது உண்டு என்றும் வைஜெயந்தி அரசிடம் முறையிட்டால் ரூ.30,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.