☰
×

தீபாவளிக்கு செம சர்ப்பரைஸ் - நவம்பர் 8க்கு முன்னாடியே மகளிர் உரிமைத்தொகை

 

 

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 15ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் ரூ.1000, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் ஆடைகள், மளிகை பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க மகளிர் உரிமை தொகை 15ம் தேதி இல்லாமல் முன்கூட்டியே வரவு வைத்தால் பெரும் உதவியாக இருக்கும் என பயனாளிகள் எதிர்பார்த்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, நவம்பர் மாதத்திற்கான உரிமைத் தொகையை வழக்கமான தேதிக்கு முன்பாகவே, நவம்பர் முதல் வாரத்திலேயே பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தீபாவளி கொண்டாட்டத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என 1.31 கோடி பயனாளிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.