விஜய்க்கு தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா
முதலமைச்சர் விஜய்க்கு தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி த.வெ.க. என்ற கட்சியை தொடங்கினார். கடந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக தேர்தல் களம் கண்ட த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.34.92 சதவீத வாக்குகளை அள்ளி தி.மு.க., அ.தி.மு.க. பாரம்பரிய கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. இதை தொடர்ந்து கடந்த மே 10-ந்தேதி தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார். இதற்கிடையே, த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கை தற்போது 2 கோடியை கடந்துள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் விஜய்க்கு தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்காக முதலில் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து அனுமதி பெற திரைப்பட அமைப்புகள் முடிவு செய்துள்ள நிலையில், அனுமதி கிடைத்தால் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.