×

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீடு தேடி வந்த அரசு வேலை! நெகிழவைத்த மு.க.ஸ்டாலின்

 

சாலை விபத்தில் உயிரிழந்த மல்லிகா என்பவரின் மாற்றுத்திறனாளி மகளுக்கு அரசு பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வீடு தேடி சென்று நேரில் வழங்கினார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் நேற்று முன்தினம் 2 தனியார் பேருந்து மோதி விபத்துகள்ளானதில் 7 பேர் உயிரிழந்த நிலையில் அதில் ஒருவர் புளியங்குடி பகுதியை  சேர்ந்த மல்லிகாவும் ஒருவர். மல்லிகா  கணவனை இழந்து தனது மூன்று பிள்ளைகளை பீடி சுற்றி படிக்க வைத்ததாகவும் மகள் கிருத்திகாவுக்கு இரண்டு கண்ணும்  தெரியாத நிலையில் சிறுவயதிலிருந்து பீடி சுற்றி படிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

மல்லிகா சாலை விபத்தில் இறந்ததை தொடர்ந்து அந்த குடும்பம்  செயல்இழந்து காணப்பட்ட நிலையில், கண் தெரியாத கீர்த்திகா என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு இது பற்றி தெரிய வந்தவுடன் அவர் கீர்த்திகாவை ஃபோனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதுடன். மாவட்ட ஆட்சித் தலைவர் உங்களை வந்து சந்திப்பார் அரசு வேலை கிடைக்க வழிவகை செய்து தருவதாக முதலமைச்சர் மு.க,ஸ்டாலின்  கூறியிருந்தார். இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் விபத்தில் இறந்த மல்லிகாவின் மாற்றுத்திறனாளி மகளை வீட்டிற்கு சென்று சந்தித்து அவருக்கு புளியங்குடி நகராட்சியில் டேட்டா என்ட்ரி பணி ஆணையை வழங்கினார்.