×

'ஒன் வே'-யில் வந்த அரசு பேருந்து - தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்

 

"ஒரு கார் கூட ஏறி வரக்கூடாதுனு சொல்லிட்டு இருக்கோம் இவ்வளவு பெரிய பஸ் ஏறி வரலாமா?" என ஒன்வே-ல் வந்த அரசு பேருந்தை அப்படியே திரும்பி போக வைத்த போக்குவரத்து காவலரின் செயல் வைரலாகிவருகிறது.

"ஒரு கார் கூட ஏறி வரக்கூடாதுனு சொல்லிட்டு இருக்கோம் இவ்வளவு பெரிய பஸ் ஏறி வரலாமா?"

ஒன்வே-ல் வந்த அரசு பேருந்தை அப்படியே திரும்பி போக வைத்த போக்குவரத்து காவலர்... வைரலாகும் செயல்#Chennai | #GovtBus | #TrafficPolice | #PolimerNews pic.twitter.com/CYpqQDu9J5

— Polimer News (@polimernews) August 13, 2026


சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் சிக்னல் அருகே, போக்குவரத்து விதிகளை மீறி ஒன் வே சாலையில் வந்த அரசு மாநகரப் பேருந்தை, போக்குவரத்து காவலர் தடுத்து நிறுத்திய சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. அரசு பேருந்தாக இருந்தாலும் ஒன் வே விதியை மீறி செல்ல அனுமதிக்க முடியாது என ஓட்டுநரிடம் தெரிவித்த காவலர், மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தினார்.