☰
×

டிஎஸ்பி இன்பராஜ்-ஆக சூர்யா! சீன் படத்திலிருந்து வெளியான சூர்யாவின் கிளிம்ப்ஸ் வீடியோ

 

நடிகர் சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படத்தின் DSP இன்பராஜ் கதாபாத்திரத்தின் Glimpse வீடியோ வெளியானது. 

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/zt35WyMBaWo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/zt35WyMBaWo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">

ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா தயாரிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் 'சீன்' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் முதல் பிரத்யேக நிகழ்வு துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'சீன்' படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியிருக்க, வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷ்யாம் இசையமைந்திருக்கிறார். ஜெயஸ்ரீ தாமோதரன் இணை தயாரிப்பாளராக பணியாற்றி, மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில்`சீன்' படத்திலிருந்து அவரது இன்பராஜ் கதாபாத்திர க்ளிம்ஸ் வீடியோ இன்று மாலை  வெளியானது.  இந்த வீடியோவில், காவல்துறை அதிகாரியாக கொலை நடந்த இடத்துக்கு வருகிறார் சூர்யா. அப்போது அவருடன் ராஜ்பிரியன் சக காவல்துறை அதிகாரியாக நடந்து வருகிறார். அவர் ‘சார்’ என அழைக்க ‘என்னடா சார் மோருன்னு.. அண்ணானு கூப்டலாம்ல’ என்கிறார் சூர்யா. இப்படியாக தொடங்கி… ‘கொரோனா டைம்ல எதுக்கு இவ்ளோ கூட்டம்.. சரி இருக்கட்டும் அப்போ தான் ரீல்ஸ்ல பாக்க மாஸா இருக்கும்’ என்கிறார் சூர்யா. இதன் மூலம் படம் நகைச்சுவை கலந்த க்ரைம் த்ரில்லராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.