மது போதையில் இளைஞரை அடித்து கொலை செய்த கும்பல்! கோவில் திருவிழாவில் நடந்த கொடூரம்
கேரள மாநிலம் கொல்லத்தில் கோவில் திருவிழாவில் மது போதையில் இளைஞரை அடித்து கொலை செய்த கும்பலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்..
கேரளா மாநிலம் கொல்லத்தில், சக்தி குளங்கரா மருதடி கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த கோவிலில் திருவாபரண ஊர்வலத்தை பார்ப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை குன்னத்தூர் பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரர் ஜெய கிருஷ்ணன் ஆகியோர் தனது சகோதரி வீட்டுக்கு வந்துள்ளனர். இரவு நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்ட சகோதரர்களிடம் மது போதையில் இருந்த கும்பல் தகராறு செய்துள்ளது. ஹரி கிருஷ்ணனை அந்த கும்பல் தாக்க முயன்ற போது சகோதரர் ஜெயகிருஷ்ணன் தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த கும்பலை சேர்ந்தவர்கள் மரக்கட்டையால் ஹரி கிருஷ்ணனின் தலையில் ஓங்கி அடித்துள்ளனர். இதில் மயங்கி விழுந்த அவரை திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனார். அங்கு மூளைச்சாவடைந்த ஹரி கிருஷ்ணன் நேற்று இரவு உயிரிழந்தார். உயிரிழந்த ஹரி கிருஷ்ணன் அடூர் மணக்காலா பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். கோவில் திருவிழாவில் இளைஞரை மது போதையில் கும்பல் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.