×

யூடியூபர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு

 

FSSAI உரிமம் உள்ள கடைகளில் மட்டுமே YOUTUBERS FOOD REVIEW செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

உணவகங்களில் ஃபுட் ரிவ்யூ (Food Review) செய்யும் யூடியூபர்கள், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையின் புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, FSSAI உரிமம் உள்ள கடைகளில் மட்டுமே YOUTUBERS FOOD REVIEW செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. கடையின் வெளித்தோற்றத்தையும், உள்தோற்றத்தையும் மட்டுமே காட்சிப்படுத்தி ஃபுட் ரிவ்யூ எடுக்கக் கூடாது என்றும் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா எனவும் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  உணவகங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலோ அல்லது விளம்பரம் தேடும் நோக்கிலோ தவறான தகவல்களைப் பரப்பக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.