உலகக்கோப்ப ஜெயித்து கொடுத்தது ஹிப் ஹாப் ஆதியா? அவரே வெளியிட்ட வீடியோ!!
Jul 9, 2024, 08:35 IST
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் டி20 உலக கோப்பையை வென்றது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அமெரிக்காவில் நடந்த டி20 உலக கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தது. இதையடுத்து பல்வேறு கொண்டாட்டங்களும், பரிசு மழைகளும் இந்திய அணியை கௌரவித்தன.
இந்த சூழலில் ஹிப் ஹாப் ஆதி சமீபத்தில் விமான நிலையத்தில் இருந்தபோது ஒருவர் உங்களுடன் நான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஒருவேளை அவர் தன்னுடைய இசை ரசிகராக இருப்பார் என்று நினைத்து ஹிப் ஹாப் ஆதி அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் நன்றி என்று கூற எதற்கு என்று ஹிப்ஹாப் ஆதி கேட்டதற்கு , நீங்கள் தானே உலகக்கோப்பை வென்று கொடுத்தவர் என்று அவர் கூறியுள்ளார்.