ரோபோ சங்கர் பெயரில் ரோபோ யானையை கோவிலுக்கு கொடுத்த பிரபல நடிகர்
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த ரத்தினமங்கலம் குபேரர் கோயிலுக்கு நடிகர் டிங்கு குடும்பத்தினர், ரோபோ யானையை காணிக்கையாக வழங்கினர்.
மாஸ்டர் டிங்கு. இவர் ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடித்து புகழ்பெற்றவர். மேலும் சில படங்களின் நடித்து அமெக்காவில் பணிபுரிந்து நல்ல நிலையில் உள்ளார். இவரின் சகோதரி போஸ்வெங்கட் மனைவி சோனியா போஸ்வெங்கட் , குடும்பத்தினருடன் வண்டலூர் அடுத்த ரெத்தினமங்கலத்தில் உள்ள குபேரர் கோவிலுக்கு தன் தம்பி வழங்கியதாக 12 அடி உயரம் கொண்ட தத்ரூப ரோபோ யானையை கோவிலுக்கு வழங்கினார். அந்த யானைக்கு தம்பி விருபத்தின் பேரில் அவர் நண்பரான ரோபோசங்கர் பெயரிட்டு மகிழ்ந்தனர். மேலும் அந்த யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்து குடும்பத்தினருடன் வழிபட்டு பக்தர்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.