"திருமணமாகி சில மாதங்களிலேயே நேர்ந்த விபரீதம்!" – புதுமணத் தம்பதியின் உயிரை பறித்த பயங்கர விபத்து!
கர்நாடக மாநிலம் சிந்தாமணியில் நிகழ்ந்த சாலை விபத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். பெங்களூரு சாலையில் மின்சார இருசக்கர வாகனத்தில் சென்ற சண்முகா - மிதுனா தம்பதி மீது கார் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில், இருவரும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் பயணம் செய்த 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் மாவட்டம் பெங்களூரு-சிந்தாமணி சாலையில் உள்ள சின்னசந்திரா அருகே நேற்று இரவு காரும், மோட்டார் சைக்கிளும் மோதி பயங்கர ரோடு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிந்தாமணியைச் சேர்ந்த சண்முக் (வயது 25) மற்றும் அவரது மனைவி மிதுனா (22) ஆகிய புதுமணத் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். சில மாதங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் நடந்திருந்தது. தம்பதியின் இந்த அகால மரணம் குடும்பத்தினரையும் உறவினர்களையும் கடும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
சின்னசந்திரா அருகே கார், மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதிய வேகத்தில் பைக் அருகில் இருந்த கால்வாயில் தூக்கி வீசப்பட்டது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர்.
மேலும், காரில் இருந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற சிந்தாமணி கிராமப்புற போலீஸ் நிலைய போலீசார் ஆய்வு செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.