ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு- போலீசார் கண்முன்னே நடந்த கொடூரம்
பெரம்பலூரில் போலீசார் கஸ்டடியில் இருந்த ரவுடி காளியை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே, கைதியை ஏற்றிச் சென்ற காவல் வாகனத்தின் மீது நாட்டு வெடி குண்டுகளை வீசி மர்ம குப்பல் தாக்குதல் நடத்தியது. கைதியை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதில் மூன்று காவலர்கள் காயமடைந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு டொல்கேட் அருகே உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நாட்டு வெடிகுண்டு வீசி 2 கார்களில் தப்பியோடிய ரவுடிகளை போலீசார் தேடிவந்தனர். அதில் ஒரு கார் கடலூர் அருகே சிக்கியது. அந்த காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசாரை கண்டதும் ரவுடி கும்பல் காரை பாதி வழியில் நிறுத்திவிட்டு தப்பியோடியது.