#BREAKING தலைமைச் செயலக கட்டிடம் கட்ட உருவாக்கப்பட்ட TNICC என்ற கார்ப்பரேட் நிறுவனம்
கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள புதிய பொதுத் துறை நிறுவனத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பத்துள்ளது.
தமிழக அரசு ஒரு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, "Tamil Nadu Infrastructure and Construction Corporation (TNICC)" என்ற பெயரில் ஒரு புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. 18.08.2026 அன்று சட்டசபையில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் "மாநிலத்தில் நடைபெறவுள்ள 200 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட அரசு கட்டடப் பணிகளை மேற்கொள்ளுதல், பயன்படுத்தப்படாத அரசு நிலங்களில் வருவாய் உருவாக்கும் வகையில் கட்டடங்களை உருவாக்குதல், தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான கட்டடம் கட்டுவதற்கு கோரப்படும் ஒப்பந்தங்களில் பங்கேற்றல் ஆகியவற்றிற்காக ஒரு கோடி ரூபாய் தொகுப்பு நிதியுடன் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் (TNICC) நிறுவப்படும்" என அறிவித்தார்.
இந்நிலையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள புதிய பொதுத் துறை நிறுவனத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பத்துள்ளது. அதன்படி, ரூ.200 கோடிக்கு மேல் உள்ள அனைத்து அரசு கட்டுமான பணிகளையும் இனி இந்த நிறுவனம் தான் செய்யும்.பயன்படுத்தாமல் கிடக்கும் அரசு நிலங்களில் கட்டிடம் கட்டி அரசுக்கு வருவாய் உருவாக்கும். தேசிய, சர்வதேச தனியார் நிறுவனங்களின் கட்டிட டெண்டர்களில் TNICC போட்டியிடும்.Township, Industrial Hubs, Tech Parks, IT Cities, Business Parks கட்டும். அழகான Architectural Plan மற்றும் தரக்கட்டுப்பாடு சேவைகளை வழங்கும். இனி தமிழகத்தில் பெரிய பாலம், மருத்துவமனை, தலைமைச் செயலக கட்டிடம், IT Park எல்லாம் PWD நேரடியாக கட்டாது, இந்த TNICC என்ற கார்ப்பரேட் நிறுவனம் தான் கட்டும். இது ஒரு தனியார் கம்பெனி போல வேகமாக செயல்படும், லாபமும் ஈட்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.